பத்மாசனம்

Padmasana

செய்முறை: 

    முதுகை வளைக்காமல், தலை நிமிர்ந்து அமர்ந்து கழுத்தை நேராக வைத்துக் கொள்ளவும். வலது காலை மடித்து இடது தொடைமீதும், இடது காலை மடித்து வலது தொடைமீதும் வைக்கவும். இடது கையின் மேல் வலது கையை திறந்த நிலையில் மேல் நோக்கி வைக்கவும், கண்களை மெதுவாக மூடி அதன் பார்வை மையம் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும். ஒரே சீராக நிமிடத்திற்கு 14 முதல் 16 தடவை மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியை காலை 6 மற்றும் மாலை 6 மணியளவில் குறைந்தது 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி கொண்டு பயிற்சி செய்வது நல்லது.

பலன்கள்

இரத்த ஓட்டம் சீராக அமையும்.

ஆன்மீக பலன்கள்: மனச்சோர்வு நீங்குகிறது, மனஅமைதி பெறும், மனஅழுத்தம் நீங்கும், தன்னம்பிக்கையினை வளர்க்கிறது.

பிறவற்றைக் காண்க :

பர்வத ஆசனம்

புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.

யோக முத்ரா

முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும்.

கோமுகாசனம்

பசியின்மை நீங்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும்.

சூரிய நமஸ்காரம்

உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன.