சக்ராசனம்

chakarasanam

செய்முறை: 

    விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும். இரண்டு கால்களையும் மடக்க வேண்டும். கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும். கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும். உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும் (இந்த நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.) ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.

உடல் ரீதியான பலன்கள்

    உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான இரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது.

பயன்பெறும் உறுப்புகள்: குதிக்கால்கள், கைகள்

இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும்.

ஆன்மீக பலன்கள்:   மனச்சோர்வு நீங்குகிறது

chakarasanam
பிறவற்றைக் காண்க :

பர்வதாசனம்

தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக அமையும்.

வஜ்ராசனம்

ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும்.

உஷ்டிராசனம்

முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது.

வஜ்ரா முத்ரா

(சசாங்கசனம்)

நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும். வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.