அர்த்தகடி சக்ராசனம்

செய்முறை:
உடலை வலது பக்கமாக வளைத்து ஒரு கை வலது முழங்கால் தொடும்படி மற்றொரு கை தலையின் காதை ஒட்டி படத்தில் காட்டியவாறு இருபுறமும் 1 நிமிடம் செய்யவும். அர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) – 1 நிமிடம்.
பயன்பெறும் உறுப்புகள்: இடுப்பு பகுதி
மூச்சின் கவனம்
கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்
முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம் அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன. நுரையீரல்கள் கொள்ளளவு அதிகரித்து இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகின்றது. பாதத்திற்கு நல்லது.

ஆன்மீக பலன்கள்: பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கின்றது. ஓய்வான உணர்வு ஏற்படுகின்றது
குணமாகும் நோய்கள்
முதுகுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.
எச்சரிக்கை
அதிக இரத்த அழுத்தம், இதய நோய் , கழுத்து வலி உள்ளவர்கள். இதைச் செய்ய கூடாது.

திரிகோணாசனம்
பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு நல்லது.
ஏக பாதாசனம்
உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்.
அர்த்த சிராசனம்
மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும்.
சக்ராசனம்
உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது.