உட்கட்டாசனம்

செய்முறை:
நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையில், ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைக்கவும். கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்ட வேண்டும்
உடம்பை மெதுவாக கீழே இறக்கி நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும். தொடையின் மேல் பகுதி கிடைமட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலையில் முதுகெலும்பு நேராக, 90 டிகிரியில் இருக்க வேண்டும்.
முன் பக்க உடம்பை வளைக்கக் கூடாது.20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம்.
பயன்பெறும் உறுப்புகள்: முதுகெலும்பு
மூச்சின் கவனம்
ஆசன நிலையில் சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். செய்து முடித்த பின் நன்றாக ஆழ்ந்து மூச்சு இழுத்து விட வேண்டும். இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
பிராண சக்தியினை உயர்த்தும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும்.
ஆன்மீக பலன்கள்: மனஅமைதி பெறும்,
மனஅழுத்தம் நீங்கும்.

குணமாகும் நோய்கள்
மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள் நீங்கும்.

அர்த்த சக்ராசனம்
பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கின்றது. ஓய்வான உணர்வு ஏற்படுகின்றது.
பத்ம ஹஸ்தாஸனம்
படர் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப்படுகிறது.
அர்த்தகடி சக்ராசனம்
பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கின்றது. ஓய்வான உணர்வு ஏற்படுகின்றது.
திரிகோணாசனம்
பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு நல்லது.