நாவல் மரம்

நாவல்பழம் உள்நாட்டில் வர்த்தக மதிப்பு மிக்க பழமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி மற்றும் ராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் உயரமாக மற்றும் அழகாக தோற்றமளிக்கும். இம்மரத்தை சாலை ஒரங்களில் நிழலிற்காகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது.
இதன் தாயகம் இந்தியா அல்லது கிழக்கிந்திய தீவுகள் ஆகும். இது தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர் மற்றும் சில நாடுகளிலும் காணப்படுகிறது. இது புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்பமண்டல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இமயமலையில் 1300 மீட்டர் வரை மற்றும் குமோன் மலைகளில் 1600 மீட்டர் உயரத்திலும் காணப்படுகின்றது. இது பரவலாக கங்கை சமவெளியிலிருந்து தென் தமிழ்நாடு வரை வளர்க்கப்படுகிறது.
நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது.
இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம்,விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது.
சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது. நீரிழிவு நோய்க்கு இம்மரத்தின் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நாவற்பழங்கள் உடல் சூட்டைக் குறைக்க பயன்படுகின்றன.

இப்பழங்கள் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், இரத்தத்துடன் கூடிய பேதி ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இப்பழமும், இப்பழத்தின் காயவைத்து அரைத்த பொடியும் சர்கரை நோயை குணப்படுத்த வல்லதாகும். நாவற்பழம் உடல் சூட்டினால் ஏற்படும் நீர்சுருக்கினையும் குணமாக்குகின்றது.
அல்சர், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கர்பப்பை கோளாறுகள், இரத்தப்போக்கு, புற்றுநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக இவை பயன்படுகின்றன.நோய் தடுப்பு காரணியாகவும் நாவல் பழங்கள் பயன்படுகின்றது.நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் ‘நா+அல்’ (நாவல்) என்றனர். துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களில் நாவல் பழம் அறியப்படுகிறது. இதில் கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகள் உள்ளன.நாவற்பழம் பழ வகைகளில் ஒன்று ஆகும். இப்பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே கிடைக்கும். இப்பழத்தில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் உள்ளது.
வயிற்றுப்போக்கு நீங்கும்
- பழத்திலிருந்து ஒயின் தயாரிக்கின்றனர். ஜெல்லி மற்றும் ஸ்குவாஷ் முதலிய பானங்கள் தயாரிக்கலாம்.
- பாலுடன் பட்டைச் சாறைக் கலந்து உட்கொண்டால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
- வைட்டமீன் ‘சி’ பற்றாக்குறையை நீக்கும். மண்ணீரல் வீக்கத்திற்கும் மருந்தாகும்.
பயன்கள்
- நீரிழிவைக் கட்டுப்படுத்த நாவல் கொட்டைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு, ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர வேண்டும்.
- 10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் உள்ள முற்றிய நாவல் மரத்தின் பட்டையைச் சேகரித்து, நன்கு நசுக்கி, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, குடிக்க மாதவிடாயின்போது ஏற்படும் அதிகரித்த இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். இவ்வாறு இரண்டு வேளைகள், 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.
- நாவல் இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை இரு வேளைகள் 3 நாட்களுக்கு இவ்வாறு செய்யபேதி கட்டுப்படும்.

நில வேம்பு
நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
சீதாபழம்
மேனி பளபளப்பாகும்: விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
முருங்கை மரம்
முருங்கை பிஞ்சு, உடல் தாதுக்களின் எரிச்சலைப் போக்கும்; காமம் பெருக்கும்; நாக்குச் சுவையின்மையைக் குணமாக்கும்.
கொய்யா மரம்
கொய்யாமரத்தின் பட்டை காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்தும்.