உருத்திராட்ச மரம்

Elaeocarpus Ganitrus Roxb

உருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ், எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கு, ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் உருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது ,அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே உருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,

  • எலீயோகார்பஸ் சொராட்டஸ்
  • எலீயோகார்பஸ் ட்யூபர்குலேட்டஸ்
  • எலீயோகார்பஸ் கானிட்ரஸ்

உருத்திராக்கம்   என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின்சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன.

நேபாளத்தில்அதிகம் விளைகின்றன. அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் உருத்ராட்ச மரங்களைச் மரங்களைச் செழிக்க வைக்கின்றன.

Elaeocarpus Ganitrus Roxb
  • உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின்கண்களைக் குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது.
  • கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்பன அக்கமணியின் மறு பெயர்கள்.
  • உருத்திராக்கம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது.
உருத்ராட்சப்பழம்:
  • மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம், வெண்மை நிறப்பூக்கள், கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும்.
  • இவை ஏப்ரல்-மே மாதங்களில் பூ பூக்கும், ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்.
பிரபலம் அடைந்தது

ருத்ராட்சம் மேற்சொன்னவாறு ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது, சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணியவேண்டும், என்று பரவலாக எண்ணபட்டதால் பலரும் அணியமலிருந்தனர் .ருத்ராட்சத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது.

1 முகம் முதல் 21 முகம்

ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும்  ஒரு கொட்டை இருக்கும், உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்.

பிறவற்றைக் காண்க :

கொன்றை மரம்

கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும், இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

மஞ்சள்

மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை

காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

துளசி

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.