இலுப்பை மரம்

Bassia longifolia
  • இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம்இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.இலுப்பை மரம் வெப்ப மண்டல மரவகையைச் சேர்ந்தது. கோடைகாலத்தில் இலையை உதிர்த்து விடும்.
  • சப்போட்டா தாவர குடும்பத்தை சேர்ந்தது. இலைகள் சப்போட்டா இலையை ஒத்திருக்கும். நூறு அடிக்குமேல் வளரக்கூடியது. சப்போட்டா குற்று செடி அல்லது குற்று மர வகையைச் சேர்ந்த்து, ஆனால் இலுப்ப மிக உயரமாக வளரும்.பூக்கள் உருண்டை வடிவமும் இனிப்பு சுவையும் வெண்மை நிறமும் உடையதாய் இருக்கும்.
  • இலுப்பை பூ முத்தின் வடிவில் சாறுடையதாக இருக்கும். இலுப்பை பழத்தின் சுவை, மணம் அனைத்தும் சப்போட்டா பழத்தை ஒத்திருக்கும். ஆனால் அதன் கொட்டை சப்போட்டா விதையை விட பெரிதாக இருக்கும். இலுப்பை பழம் சிறுவர்கள் உண்பார்கள்.

இலுப்பை பழத்தை வௌவால்கள் விரும்பி உண்ணும்.இலுப்பை கொட்டையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். சப்போட்டா விதைகள் முளைக்கும் தன்மை அற்றது. அதனால் இலுப்பை விதையை முளைக்க வைத்து அதனுடன் சப்போட்டா மரக்கிளையை ஒட்டு சேர்க்கின்றனர்.மரத்தின் உள்பாகம் மிகவும் உறுதி உடையது.

குளக்கரையிலும் தரிசு நிலங்களிலும் இலுப்பையை நட்டு வளர்க்க முடியும்.இதன் எண்ணெய் சற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலேசான கசப்பு சுவையைப் பெற்றிருக்கும்.இதன் எண்ணெய்  குளிர்காலத்தில் உறைந்து விடும்.

Bassia longifolia

இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சிறிது கசப்பு சுவையாக இருக்கும். கோயில்களில் விளக்கு வைக்க இந்த எண்ணெயை பயன்படுத்தினர். அதனால் சிவன் கோயில் உள்ள இடங்களில் இலுப்பை மரங்களை நட்டு வளர்த்தனர். இதன் எண்ணெய் மருந்தாகவும் பயன்படுகிறது. சவர்க்காரம் தயாரிக்க, கோயில் திருவிளக்கெரிக்க பயன்படும்.

Bassia longifolia
அகத்தியர் குணவாகடம் :

கரப்பா னடருங் கடிசிரங்கு புண்ணும்

உரப்பா மிடுப்புவலி யோடுங் -கரப்பான்

பாகுமொழி மாதே பலமுண்டாந் துற்பலம்

ஏதகுமி லுப்பையி னெய்க்கே

-அகத்தியர் குணவாகடம்

பொருள்: இடுப்பு வலியைப் போக்கும், உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  ஆனால் கரப்பானை உண்டுபண்ணும் தன்மை கொண்டது.

இலுப்பைக் காய்

இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும்.  அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால்  வெண்படலம் விரைவில் குணமாகும்.

இலுப்பைப் பழம்

இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது.  மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.

விதை

இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.

பயன்கள்

கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.இலுப்பைப்பூ நாடி நடையையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியுண்டாக்கும். சதை நரம்புகளை சுருங்கச்செய்யும். தும்மலுண்டாக்கும்.

பிறவற்றைக் காண்க :

உருத்திராட்சம்

ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும்  ஒரு கொட்டை இருக்கும்.

கொன்றை மரம்

கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும், இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

மஞ்சள்

மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை

காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.