ஆமணக்கு

- ஆமணக்கு வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர்வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது.
- நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.கோயில்களுக்குச் விளக்கேற்றப் பயன்படும் பலவிதமான எண்ணெய் வகைகளில் சிறப்பாகாக் குறிப்பிடப்படுவது ஆமணக்கு எண்ணெய்தான்.
- கோயில்களின் தெய்வீகத் தன்மைகளுடன் ஒட்டி அமைந்துவிட்ட இந்த எண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளர்வதால் இன்று மிக அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றது.
ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.ஆமணக்குச் செடிகள் பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணலாம்.
இந்தியாவில் எல்லா இடங்களிலும் தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில் இவை மிக நன்றாக வளரும்.

- ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும் ஒரு வகையான புதர்ச் செடியாகும். இதனை ஒரு சிறிய மரம் என்றே கூறலாம். பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.
- இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து பொருளாதாரப் பலன்களும் உள்ளன. இதில மலர்கள் ஆண்டு முழுவதிலும் பூக்கின்றன.ஆமணக்குச் செடியிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயில் ரிஸினோலிக், ஐஸோரிஸினோலிக், ஸ்டியரிக், டைஹைட்ராக்ஸி ஸிடியரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கி இருக்கின்றன.
- இதன் விதைகளில் லைபேஸ், ரிசினைன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இதன் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் ரிசினைன் அல்கலாய்டுகள் இருக்கின்றன.
வகைகள்:
பொதுவாக ஆமணக்குச் செடிகளைப் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
- சிற்றாமணக்கு
- பேராமணக்கு
செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடி ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்குப் பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.
காமாலை குணமாகும்
சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும்.
சரும வியாதிகள் குணமாகும்
சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.
ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும்.
பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும். ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

இலுப்பை
இலுப்பைப்பூ நாடி நடையையும்,உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்.பசியுண்டாக்கும்.சதை நரம்புகளை சுருங்கச்செய்யும்.
உருத்திராட்சம்
ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும் ஒரு கொட்டை இருக்கும்.
கொன்றை மரம்
கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும், இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
மஞ்சள்
மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.