தென்னை மரம்

Cocus nucifera
  • இந்தியாவில் மேற்குக் கரைப் பகுதியில் 150 அங்குலத்துக்குக் மேல் மழை பெய்யும் பகுதியிலும் தென்னை வளர்கிறது, கர்நாடகத்திலும், பிலிப்பைன்சில் 40 அங்குலத்திற்கு குறைவாக மழை பெய்யும் சில பகுதிகளிலும் தென்னை வளர்கிறது
  • தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்குப் பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணை கொடுக்கிறது.
  • தேங்காய் எண்ணையின் பயன்கள் பல. குளிர்ச்சியும், தென்னை மரத்தின் சிறப்பையும், அதில் இருந்து நாம் பெறக்கூடிய பொருட்களின் பயன்களையும் உணர்த்துவதாக இந்த வரிகள் அமைந்துள்ளது.தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
  • மலேசிய, பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள். பிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன.
  • அங்கு 20 லட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது.
Cocus nucifera
  • தென்னை, உயராமான தாவரம். நெட்டைத்தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-ஆண்டுக்குள் காய்க்கத் தொடங்கும். குட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30- 35 ஆண்டுகள்.
  • செழிப்பான வண்டலோடு ஓரளவுக்குப் பெருமணல் கலந்த நல்ல மண்ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும்.
  • இப்படி நிறைய பலன் தருகிறது தென்னை. ஆக மனிதனுக்கு இயற்கையின் பொக்கிசம் தென்னை.
உணவுப்பொருளாகவும் எரிப்பொருளாகவும்

தேங்காய் உணவுப் பொருளில் பயன்படுகிறது. இதன் எண்ணெய் உணவுப்பொருளாகவும் எரிப்பொருளாகவும் பயன்படுகிறது. தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.

தேங்காய் எண்ணெய்

இரத்த மூலத்திற்குத் தென்னம் பட்டையையும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்துகிறார்கள்.

தேங்காயின் சதைப் பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மைச் சக்தியை அதிகரித்து வயிற்றுப்பூச்சிகளைச் சாகடிக்கிறது.

இதன் வேரைக் கசாயமிட்டு பருக படை, சொறி, தோல் நோய், நாக்கு வறட்சி போன்றவை குணமாகும்.

பிறவற்றைக் காண்க :

பனைமரம்

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

மூங்கில்

கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத்தொழில்கள்உள்ளிட்ட ஏராளமானதொழில்களிலும் மிக முக்கியபொருளாகவும்பயன்படுத்தப்படுகிறது.

அத்திமரம்

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

ஆமணக்கு

ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்துஎனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.