வேப்பமரம்

வேம்பு முதன் முதலில் இந்தியாவில் தோன்றியதாக நம்பப்படுகின்றது. இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது.

 

  • வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பயன்படுகிறது. சராசரியாக 15 மீ. வரை உயரமாக வளரக்கூடிய மரம். இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டுள்ள தாவரமாகும்.
  • வேம்பு இலைகள், இறகு வடிவமானவை, பல சிற்றிலைகளைக் கொண்டவை, ஒவ்வொரு சிற்றிலையும் சாதாரண இலையைப் போன்றே காணப்படும். வேம்பு பூக்கள், சிறியவை, வெண்மையானவை, சிறு கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.
  • வேம்பு காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். வேம்பு பழங்கள், 1.5செ.மீ. வரை நீளமானவை, மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மலை வேம்பு மிலியேசியே  குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது 20-25 அடி உயரம் வரை உயர்ந்து மரமாக வளரக்கூடியது. 

மலைவேம்பில் 2 வகை உள்ளது. மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது. 

துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது.

NeemTree
மருத்துவ பயன்கள்
  • வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை, முறைக் காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.
  • வேம்பு எண்ணெய், பித்த நீரை அதிகரிக்கும்; இசிவு நோயைக் குணமாக்கும்; காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். 
  • தோல் நோய்கள் குணமாக வேம்பு எண்ணெய்யை நோயுள்ள பகுதியில் பூச வேண்டும். 
  • இரசத்தில் வேப்பம் ஈர்க்கு மற்றும் வேப்பம் பூக்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள பித்த நோய்கள் குணமாகும்.
பிறவற்றைக் காண்க :

அரச மரம்

அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

மருத மரம்

அர்ஜூனா பட்டயை தேநீராக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கிறது.

மாமரம்

மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.

பலா மரம்

தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.