ரங்கோலி

தமிழரிடையே கோலம் என வழங்கப்படும் கலையுடன் உள்ள தொடர்பு காரணமாகவும், முக்கிய வேறுபாடாக நிறம் இருப்பதாலும், இந்திய கோலங்களின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அந்தக்காலம் தொடங்கி இன்று வரை இந்த ரங்கோலி கோலங்கள் நம் வீட்டை தீய சக்திகள் அணுகாமல் பாதுகாத்து வருகின்றன. இன்று இவை பண்டிகை காலங்களில் வீடுகளை வண்ணமயமாக்க உதவுகின்றன. தீபாவளி, நவராத்திரி மற்றும் ஓணம், கார்த்திகை  போன்ற பண்டிகைகள் ரங்கோலி இல்லாமல் முழுமையடைவதில்லை. இது தவிர வீட்டு விசேஷங்களின் போதும் பூஜைகளின் போதும் கூட கோலங்கள் இடப்படும். வழக்கமாக ரங்கோலி கோலங்கள் பாரம்பரிய முறைப்படி வண்ணப் பொடிகள் கொண்டு இடப்படும். ஆனால் தற்போது தொழில் வல்லுநர்கள் இன்று வண்ணப் பூக்கள், அரிசி மாவு, விளக்குகள் மற்றும் பிற பொருள்களைக் கொண்டு மிகச் சிறந்த கோலங்களை வடிவமைக்கின்றனர். ரங்கோலிகள் பொதுவாக வீட்டின் முன்வாசல் அல்லது முன்புறம் திறந்த இடங்களில் இடப்படும். வீட்டில் பெரிய வரவேற்பறை இருந்தால் அங்கு வட்ட வடிவ கோலம் போட்டு அதில் வண்ணப் பொடிகள், பூ இதழ்கள் மற்றும் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யலாம். ரங்கோலி கோலம் உங்கள் வீட்டிற்கு விசேஷ தோற்றத்தைத் தருகிறது.

ரங்கோலி குறிப்பு: 

புள்ளிக் கோலம்: இதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில் சரிசமமான எண்ணிக்கையில் புள்ளிகளும் வரிசைகளும் இடவேண்டும். இதன் வடிவங்கள் வட்டம், சதுரம், முக்கோணம், நட்சத்திரம் என பலவகைப்படும். அதன் பின்னர் நீங்கள் இந்த வடிவங்களில் வண்ணத்தை நிரப்பலாம். இது தென்னிந்தியாவில் தீபாவளியின்போது பிரபலம்.

பூக்கள் ரங்கோலி:  உங்களுக்குத் தேவையானதெல்லாம் தாமரை, ரோஜா, சாமந்தி, மல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்களின் இதழ்கள், இதன் வடிவமைப்பை கோடாக வரைந்து அதில் பூவிதழ்களை நிரப்புங்கள். அதன் நடுவில் விளக்கை வைத்து உங்கள் தீபாவளி எவ்வாறு ஒளிமிக்கதாகிறது எனப் பாருங்கள்.

மயில் ரங்கோலி: நீங்கள் இதற்கு மலர்கள், வண்ண மணல், வண்ணம் கலந்த அரிசி மாவு போன்றவற்றை பயன்படுத்தி இதை செய்யலாம். மயிலை விட அழகான ஒரு வடிவத்தை கோலத்தில் காண முடியாது. உங்கள் வீட்டின் சுத்தமான ஒரு மூலையை தேர்வு செய்து இதனை செய்யலாம்.

மணிகள் ரங்கோலி: நீங்கள் பல்வேறு வகையான மணிகள், வண்ணக் கற்கள், வண்ண வில்லைகள் அல்லது ஜிகினா மற்றும் வண்ணக் காகிதங்கள் கொண்டு இதனை செய்யமுடியும். உங்களுக்குப் பிடித்தமான வண்ணங்களில் காகிதங்களை வெட்டி வடிவங்களை உருவாக்குங்கள். அதில் இந்த மணிகள் மற்றும் ஜிகினா வில்லைகளை ஒட்டுங்கள். அதனை உங்களுக்கு விருப்பமான இடத்தில் வைக்கவும். சிறிய காகித ரங்கோலிகள் மெழுகுவத்தி வெளிச்சத்தில் மிகவும் அழகாக இருக்கும்.

  •  அல்போனா: இது வங்காளிகள் செய்யும் ஒரு சிறப்பான ரங்கோலி. பொதுவாக தீபாவளியன்று இலட்சுமி அல்லது காளி பூஜை செய்யும்போது பிரத்தியேகமாக அவர்கள் இதை இடுவர். மேலும் பல விசேஷங்களுக்கும் இதை அவர்கள் இடுவதுண்டு. வழக்கமாக, அல்போனா ரங்கோலிகள் வட்ட வடிவமாக பெய்ஸ்லி, பூக்கள் மற்றும் புள்ளிகள் ஆகியவற்றுடன் காணப்படும். அரிசிமாவில் முழுவதும் வெள்ளை நிறத்தில் செய்யப்படுவது இதன் சிறப்பு.

ரங்கோலி குறிப்பு : சௌக்  இது ரங்கோலிகளில் மிகவும் பழமை வாய்ந்தது. நீங்கள் உங்கள் பாட்டி உங்கள் வீட்டுப் பூஜை அறை முன் இதனை போடுவதைப் பார்த்திருப்பீர்கள். வழக்கமாக இது கோதுமை மாவு, மஞ்சள் மற்றும் காவி நிறம் கொண்டு செய்யப்படும். இது மிகவும் புனிதமானதாகவும் கடவுளுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

ரங்கோலி குறிப்பு : உடனடி ரங்கோலி இது உங்களுக்குப் பரிச்சயமானததுதான். நீங்கள் பல சமயங்களில் பல விசேஷங்களின் போது இதை நீங்கள் போட்டிருப்பீர்கள். வண்ண மணல் கொண்டு இதை செய்வதுண்டு. இதை நீங்கள் முதல் முறையாக செய்தால் முதலில் அதற்கான கோடுகளை சாக்பீஸை வைத்து வரைந்து அதனுள் வண்ணங்களை நிரப்புங்கள்.

பிறவற்றைக் காண்க :

புள்ளி கோலங்கள்

நம் கலாசாரத்தின் பழமையினைப் உணர்த்தும் கோலங்கள் மூலம் மகிழ்ச்சியினைப் பரிமாறிக் கொள்ளலாம்.

சிக்கு கோலங்கள்

நின்ற நிலையில் குனிந்தபடி, அசையாது நின்று, மனதிற்குள் ஒரு கணக்கோடு போடும் கோலம்.