பச்சைக் குதிரை

பச்சைக் குதிரை ஒரு சிறுவர் விளையாட்டு. வாலிபர்களும் ஒத்த பருவத்தினரோடு இதனை விளையாடுவது உண்டு. பெரும்பாலும் இது நிலா வெளிச்சத்தில் நடைபெறும். இந்த விளையாட்டின் முதல் படி பிறருடைய காலைத் தாண்டுவதில் தொடங்கும். அதனால் இந்த விளையாட்டுக்குக் கால்தாண்டி விளையாட்டு என்னும் பெயரும் உண்டு.
விளையாடுபவர்களின் எண்ணிக்கை: இரண்டிற்கு மேற்பட்டவர்கள்
ஆடுகளம்: வெளிப்பரப்பு
ஆட்ட வகை: கால்தாண்டி, ஆள்-தாண்டல்
ஆட்ட நேரம்: எல்லாத் தாண்டுதலும் முடிந்தபின் மறு ஆட்டம் தொடங்கும்.
பயன்கள்: உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, மூட்டு சேரும் இடங்களில் உறுதி.
சிறப்பு: சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்

பல்லாங்குழி
பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கைத்திறன், நுண்ணிய கணிதத்திறன் விரல்களின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பம்பரம்
தனித்திறன் வளர்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது.
தாயம்
விடா முயற்சி அதிகரிக்கிறது. தன்னம்பிக்கை வளர்கிறது.
ஆடு புலி ஆட்டம்
தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது.