கபடி

Kabaddi

கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளான ஆயர்களால் பல காலமாக, விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று அதாவது கை+பிடி = கபடி.

விளையாடுபவர்களின் எண்ணிக்கை : இரு அணிகள்(ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர்).

ஆட்ட நேரம்: 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார்.

ஆடுகளம்: மேடு பள்ளம் இல்லாத ஒரு  நீள்சதுரமான சமதள  இடம்.

பயன்கள்: கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது. இவ்விளையாட்டினால் நாம் உடல்உறுதி, மனஉறுதி இரண்டினையும் பெறலாம்.

சிறப்பு: சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது.

பிறவற்றைக் காண்க :

தட்டாங்கல் ஆட்டம்

தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும், கைநரம்புகளும் வலுப்பெறுகிறது.

வழுக்கு மரம் ஏறல்

தன்னம்பிக்கை இவ்விளையாட்டின் வாயிலாக வளரும். எல்லோரோடும் சேர்ந்து விளையாடுவதால் மனிதநேய உணர்வு ஏற்படுதல்.

பச்சைக் குதிரை

சாதனைகள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணரச் செய்யும் வாய்ப்புகள்.

பல்லாங்குழி

பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கைத்திறன், நுண்ணிய கணிதத்திறன் விரல்களின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.