ஆடு புலி ஆட்டம்

Goat and tiger game

ஆடு புலி ஆட்டம்  என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது.

இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.

விளையாடுபவர்களின் எண்ணிக்கை: 2

ஆடுபொருள்: புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்கள்.

ஆடுகளம்: பாறை அல்லது திண்ணையில் கோடு போட்ட அரங்கம். முக்கோணக் கூம்புக் கோடு.

ஆடுபொருளின் எண்ணிக்கை: ஆடுகள் என்னும் பெயரில் 15 சிறு காய்கற்கள். புலி என்னும் பெயரில் 3 சற்றே பெரிய காய்கற்கள்.

வேறு தமிழ் பெயர்கள்:  வெட்டும்புலி ஆட்டம்,  குழை எடு ஆட்டம்.

சங்கப்பாடல்

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின், செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும், விளையாடு இன் நகை (நற்றிணை 341) குறிப்பிடுகிறது.

பயன்கள்: மதி நுட்பத்திறன் அதிகரிக்கிறது.  

பிறவற்றைக் காண்க :


கிட்டிப்புள்ளு

மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதுபோல உணர்கின்றனர்.

கோலி

விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  எந்த முடிவு எடுக்கும்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.  

கபடி

கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது.

தட்டாங்கல் ஆட்டம்

தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது.