அரிசிமாவு உப்புமா

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 150 கிராம்

பச்சை மிளகாய் – 3

பெரிய வெங்காயம் – 3

எண்ணெய் – 50 மி.லிட்டர்

கடுகு – அரை தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 

  • அரிசி மாவில் த‌ண்‌ணீ‌ர் ஊற்றி நன்றாகக் கிளறி அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும்.
Rice flour uppuma
Rice flour uppuma
  • வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம் பருப்பையும் போட்டுத் தாளித்துக் கொண்டு நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்குங்கள்.
  • அவை வதங்கியதும் அரிசி மாவைக் கொட்டி உப்பையும் போட்டுக் கிளறுங்கள்.
  • அரிசி மாவு வெந்ததும் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள். சுவையான அரிசிமாவு உப்புமா தயார்.

நன்மைகள் : கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு செய்யப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இது பல்வேறு காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால், ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதாகவும் இருக்கும்.

பிறவற்றைக் காண்க :

தினை ஆப்பம்

உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் – வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி – வீக்கங்களை ஒழிக்கும்.

வெந்தயக்கீரை இட்லி

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

சீரக இடியாப்பம்

எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.

கேழ்வரகு கூழ்

இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.