கம்பு தோசை

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப்

உளுத்தம் பருப்பு  – 1/2 கப்

வெந்தயம்  –  1/2 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • உழுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் வெந்தயம் சேர்க்கவும், அதனுடன் நீர் சேர்க்கவும்.
  • பின்பு கம்பை வேறொரு பாத்திரத்தில் வைக்கவும் அதனுடன் நீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

    Bajra Dosa
    Bajra Dosa
    • முதலில் உழுத்தம் பருப்பை மென்மையாக அரைத்துக் கொள்ளவும் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
    • பின்பு கம்பினையும் மென்மையாக அரைத்துக் கொள்ளவும் அதையும் அதே பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலக்கவும் அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
    • அதனை மூடி ஒரு இரவு முழுவதும் வைக்கவும் அதனை எடுத்து நன்கு கலக்கவும்.
    • தோசைக்கல்லை சூடாக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.சுவையான கம்பு தோசை தயார்.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல டிபன்.

    நன்மைகள்: மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகிறது.

    பிறவற்றைக் காண்க :

    அரிசிமாவு உப்புமா

    கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு செய்யப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமானது.

    தினை ஆப்பம்

    உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது, வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.

    வெந்தயக்கீரை இட்லி

    இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

    சீரக இடியாப்பம்

    எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.