தேவையான பொருட்கள்:

 வெள்ளைச் சோளம் – ஒரு கப்

 குண்டு உளுந்து – அரை கப்

 வெந்தயம் – 2 மேசைக்கரண்டி

 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 

  • குண்டு உளுந்தை நன்றாகக் கழுவி மூழ்கும் அளவு நீர் ஊற்றி தோராயமாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். வெந்தயத்தை தனியாக ஊற வைக்கவும். சோளத்தை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். (சோளம் கடினத் தன்மையுடையதால் ஊறுவதற்கு குறைந்தது ஆறு மணி நேரமாகும். வெந்நீரில் ஊறவைத்தால் நேரம் சற்று குறையலாம்). 
  • சோளம் ஊறியதும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் இரண்டு மூன்று சுற்றுகள் அரைக்கவும். பிறகு நீர் விட்டு நன்கு அரைத்துக்
Chola Dosa

   கொள்ளவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

  • அரைத்த மாவு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டு நன்றாகக் கலந்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.
  • மாவு புளித்ததும் தோசைக்கல்லை சூடாக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான சோள தோசை தயார்.

நன்மைகள்: அரிசி சார்ந்த உணவை விட சோள உணவு சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. மேலும் சோளம் இதய நோய்கள், ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதையும் குறைக்கும்.

பிறவற்றைக் காண்க :

கம்பு தோசை

மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகிறது.

அரிசிமாவு உப்புமா

கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு செய்யப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமானது.

தினை ஆப்பம்

உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது, வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.

வெந்தயக்கீரை இட்லி

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.