கேழ்வரகு கூழ்

தேவையான பொருட்கள் :

      கேழ்வரகு மாவு – அரைகிலோ

      நொய் (பச்சரிசி) – 200 கிராம்

      சின்ன வெங்காயம் – 3  

      தயிர் – இரண்டு கப்

      உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • முதலில் கேழ்வரகு மாவு 2 ஸ்பூன் தயிர் சிறிது உப்பு மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.
Fine millet colloid
  • மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக் அதில் போட்டு 2 விசில் விட்டு வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.
Fine millet colloid
  • இதனை இரவில் செய்து வைக்கவும்.
  • காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.
  • இந்ந கூழினை அப்படியே கெட்டியாக சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டால் இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்.

நன்மைகள் : இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.

பிறவற்றைக் காண்க :

இட்லி

பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.

தோசை

நமது உடலுக்கு கார்ப்ஸ் அவசியம் தேவைப்படுகிறது தோசையில் இது கிடைக்கிறது.

கேழ்வரகு தோசை

மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.

சோள தோசை

தானியம் உணவாகவும், உலர்ந்த சோளத் தட்டை கால் நடை தீவனமாகவும் பயன்படுகின்றது.