ஐந்திணைப் பொருள்

Ainthinai porul

குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.

  • மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை.
  • காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை.
  • இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
  • வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்.
  • கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என அழைக்கப்பட்டன.

இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.


பண்டையத் தமிழ் மக்களின் பாடற்பொருளை
அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் வகைப்படுத்தினர். தொல்காப்பியர் இந்த மரபைப் பின்பற்றி அகப்பொருளை

  • முதற்பொருள் (நிலமும், காலமும்)
  • கருப்பொருள் (நிலத்தில் காலத்தால் தோன்றும் பொருள்)
  • உரிப்பொருள்(அக ஒழுக்கம்

என மூன்றாகப் பகுத்து விளக்கியுள்ளார்.

முதற்பொருள் (தொல்காப்பியம்)

 

  • உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது. எனவே காலம் ஒருவகை முதற்பொருள். காலத்தை ஆண்டு நோக்கில் பார்ப்பது பெரும்பொழுது. தமிழர் பார்வையில் இது ஆறு பருவம். காலத்தை நாள் நோக்கில் பார்ப்பது சிறுபொழுது.
  • தமிழர் பார்வையில் பகலில் 3 சிறுபொழுது. இரவில் 3 சிறுபொழுது. ஆக 6 சிறுபொழுது. தொல்காப்பியர் காலத்தைப் பொழுது என்கிறார். கால மாற்றத்தைப் பொழுதின் (சூரியனின்) இயக்கத்தை அடிப்படையாக வைத்துத்தானே அளவிடுகிறோம்.
மலையும் மலை சார்ந்த இடமும் (Mountain terrain)

திணை

நிலன்

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

நடுவண் நிணை (பாலை)

சேயோன் மேய மைவரை உலகம் (மலைப்பகுதி)

மாயோன் மேய காடுறை உலகம் (மேடுகாடு)

வேந்தன் மேய தீம்புனல் உலகம் (ஆறு பாயும் நன்செய் நிலம்)

வருணன் மேய பெருமணல் உலகம் (கடலோர நிலம்)

நிலப்பகுப்பு இல்லை

திணை

பெரும்பொழுது

சிறுபொழுது

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

கூதிர் காலம், முன்பனிக் காலம்

கார் காலம்

யாமப் பொழுது

மாலைப்பொழுது

வைகறை விடியல்

எற்பாடு

நிலம் : நிலம் என்பது பொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் ஆகும். நிலத்தினை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.

நிலத்தின் இயல்புகள்

  • இயற்கையின் கொடைகளாகும் அதாவது மனிதனால் உருவாக்க முடியாது உற்பத்திசெலவற்றது.
  • செயலற்றவைஅது மனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளின் இணைப்பினாலே நிலம் செயலுள்ளதாகும்.
  • இடம்பெயரும் தன்மை அற்றது.
காடும், காடு சார்ந்த நிலமும் (Forest terrain)

நிலத்தின் முக்கியத்துவம் :

 

  • உற்பத்தி மேற்கொள்ள நிலம் அவசியம்.
  • சகல மூலவளங்களும் நிலைத்திருக்க நிலம் அவசியம்.
  • மனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளை உட்புகுத்துவதனால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும்.
  • நெகிழ்ச்சியற்ற நிரம்பலை கொண்டுள்ளது.
மணலும் மணல் சார்ந்த நிலமும் (Sand terrain)

காலம் : இலக்கணத்தில் காலம் என்பது, ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகிறது என்பதைக் காட்டும் இலக்கணக் கூறு ஆகும்.

ஒரு செயல் பேசப்படும் நேரத்துக்கு முன்னரா, அதே நேரத்திலா அல்லது பின்னரா என்பதைக் குறித்துக் காட்டுவதே காலம்.

தமிழ் இலக்கணத்தில் காலம், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பது இறந்தகாலம், அந்நேரத்தில் நடந்துகொண்டு இருப்பவற்றைக் குறிப்பது நிகழ்காலம், பின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது எதிர்காலம். தமிழில் வினை சார்ந்த சொற்கள் காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்றுக் காலத்தைக் காட்டுகின்றன. காலத்தைக் காட்டும் இடைச்சொற்களைத் தொல்காப்பியர் காலக்கிளவி எனக் குறிப்பிடுகிறார்.

கருப்பொருள் (இலக்கணம்) : தமிழ் இலக்கணத்தில் கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும் என்கிறது. இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது . இப் பதினான்கு கருப்பொருள் வகைகளும் பின்வருமாறு:

ஆரணங்கு (தெய்வம்)

உயர்ந்தோர்

அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர்)

புள் (பறவை)

விலங்கு

ஊர்

நீர்

பூ

மரம்

உணா (உணவு)

பறை

யாழ்

பண்

தொழில்

உரிப்பொருள் (இலக்கணம்) : தமிழ் இலக்கணத்தில் உரிப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், கருப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஐந்து திணைகளின் நிலப்பகுதிகள் சார்ந்த கருப்பொருள்களிலேயே அமைந்திருந்தன. அவற்றில் அந்தந்த நிலப்பகுதிக்குரிய ஒழுக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன. இவ்வொழுக்கங்கள்:

 

  • புணர்தல் : ஒன்றுசேர்தல்
  • இருத்தல் : பிரிவைப் பொறுத்து இருத்தல்
  • ஊடல் : தலைவி தலைவன் மீது கோபம் கொள்ளல்
  • இரங்கல் பிரிவு தாங்காது தலைவி வருந்துதல்
  • பிரிதல் : தலைவன் தலைவியைப் பிரிதல்

என்பனவாகும். ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை வருமாறு.

 

  • குறிஞ்சி : புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.
  • பாலை : பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.
  • முல்லை : இருத்தலும், இர்த்தல் நிமித்தமும்.
  • மருதம் : ஊடலும், ஊடல் நிமித்தமும்.
  • நெய்தல் : இரங்கலும், இரங்கல் நிமித்தமும்.
வயலும் வயல் சார்ந்த நிலமும் (Crop field terrain)
கடலும் கடல் சார்ந்த இடம் (Sea terrain)
பிறவற்றைக் காண்க :

குலவை

நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் பூப்புனித நீராட்டு போன்ற இல்ல நன்னிகழ்வுகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.

சாணம் இட்டு

மெழுகுதல்

சாணம் என்றால் மாட்டின் கழிவு ஆகும். தமிழரைப் பொருத்தமட்டில் வீடுகளை மெழுகும் போது பசுவின் சாணத்தைக் கொண்டே மெழுகுவர்.

தமிழர் பண்பாட்டு

நூல்கள்

பண்படுதல் என்றால் சீர்படுத்தல் அல்லது திருத்தல் எனப்பொருள் படும். நிலத்தைப் பண்படுத்தல் என்றால் நிலத்தை பயிர்செய்யத்தக்கவாறு சீர்படுத்தலாம்.

ஈகை

ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர்.