ஈகை

ஈகை என்றால் கொடுத்தல்; இல்லாதவர்க்குக் கொடுத்தல்.கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை. திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம்.
இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது சிறந்த அறமாகும்.
- வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.முகம்மது நபி காலத்தில் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. முப்பது நாட்கள் நோன்பிருந்து சிறப்பிக்கும் திருநாளாகும்.
-
நம்மிடம் இருப்பதில் அரிசி அளவாவது மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும்.

- மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கின்றதா? சிலருக்கு ஈகைக் குணம் உண்டு. சிலருக்கு இல்லை என்பதைத் தக்க உவமை கொண்டு விளக்கும் நாலடிப் பாடற் கருத்தைப் பாருங்கள்.
ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர். ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன் தராதவர். மேலும் அணுக இயலாத இடம் என்று பனை மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும் அழகை நாமும் ரசிக்கலாம். அவை எளிய உவமைகள்; நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற உவமைகள் (நாலடி – 97).

ஈகைத் திருநாள்:
நோன்புப் பெருநாள்அல்லது ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர் அரபு மொழி: عيد الفطر) என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும்.
நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே
அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.

ஐந்திணைப் பொருள்
உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது.
குலவை
நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் பூப்புனித நீராட்டு போன்ற இல்ல நன்னிகழ்வுகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.
சாணம் இட்டு மெழுகுதல்
சாணம் என்றால் மாட்டின் கழிவு ஆகும். தமிழரைப் பொருத்தமட்டில் வீடுகளை மெழுகும் போது பசுவின் சாணத்தைக் கொண்டே மெழுகுவர்.
தமிழர் பண்பாட்டு
நூல்கள்
பண்படுதல் என்றால் சீர்படுத்தல் அல்லது திருத்தல் எனப்பொருள் படும். நிலத்தைப் பண்படுத்தல் என்றால் நிலத்தை பயிர்செய்யத்தக்கவாறு சீர்படுத்தலாம்.