தமிழர் பண்பாட்டு நூல்கள்

இதில் தமிழர் நாகரிகம் மொழி, துப்புரவு, ஊன், உடை, அணி, உறையுள், ஊர்தியும் போக்குவரத்தும், வாழ்க்கைவகை, சமயவொழுக்கம், தொழில்கள், வாணிகம், அரசியல், கல்வி, அறிவியல்கள் ஆகியனவாக வகைப்படுத்திக் கூறப்படுகிறது.
- தமிழர் சமய வரலாறு (நூல்)
- தமிழர் திருமணம் (நூல்)
- தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்)
- தமிழர் மதம் (நூல்)
- பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (நூல்)
பண்பாடு மக்களைக் கொண்டு, பொது, அந்தணர் பண்பாடு, அரசர் பண்பாடு, வணிகர் பண்பாடு, வேளாளர் பண்பாடு, பிறவகுப்பார் பண்பாடு, கள்வர் பண்பாடு, பெண்டிர் பண்பாடு எனப் பிரித்துச் சொல்லப்படுகின்றது.
தமிழர் சமய வரலாறு (நூல்)
தமிழர் சமய வரலாறு ஆ. வேலுப்பிள்ளை எழுதிய நூலாகும். சமய இலக்கியம் தொடர்பான பொதுக்கட்டுரை, சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தொடர்பான பன்முக நோக்கலான கட்டுரைகள் உள்ளிட்ட பல கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
அமைப்பு
இந்நூல் 25 தலைப்புகளைக் கொண்டுள்ளது.
தமிழர் திருமணம் (நூல்)
தமிழர் திருமணம் எனும் நூல், 1956 ஆம் ஆண்டில் தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. நூலாசிரியர் தேவநேயப் பாவாணர் நூல் முகவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“இல்லறமாகிய நல்லறம் பூணும் மக்கள் வாழ்க்கையில்
திருமணமே திருமணமே தலைசிறந்த மங்கல நிகழ்ச்சி”
ஆதலாலும், நீண்ட காலமாக தமிழுக்கும், தமிழனுக்கும் இழுக்கு நேரும் வண்ணம் ஆரியமுறையில் பெரும்பால் தமிழ திருமணங்கள் நடைபெற்றுவருவதாலும், அண்மையில் யான் நடத்திவைத்த பலதிருமணங்களில் யான் உணர்ந்த குறையை நிறைத்தற்பொருட்டும், இந்நூல் எழுதப்பெற்றது.

தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்)
தமிழர் பண்பாட்டில் சங்கு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய நூலாகும். சங்கின் இனங்களும் வளமும் என்பதில் தொடங்கி இலக்கியங்களில் சங்கும் அதன் பெயர்களும், தமிழர் பண்பாட்டிலும் வழிபாட்டிலும் அதன் பயன்பாடு, சங்கின் மீதான நம்பிக்கைகள், இசைக்கருவி என்ற நிலையில் சங்கு, மருத்துவத்தில் சங்கு, சங்குத் தொழில் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆராயப்படுகின்றன.
தமிழர் மதம் (நூல்)
தமிழர் மதம் எனும் இந்நூலானது 1972 ஆம் ஆண்டில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. இந்நூலிலே பழந்தமிழர் மதம், பின்பற்றிய கொள்கைகள், வணங்கிய தெய்வங்கள் என பலவற்றை இலக்கிய சான்றுகளுடன் தருகிறார் பாவாணர்.
இந்நூலின் முன்னுரையிலே மதம், சமயம் ஆகியன தென்சொல்லே (தமிழ் வேர் கொண்ட சொல்) என நிறுவும் தேவநேயர், மதம் தோன்றிய வகை, மூவகை மதம், குமரிநாட்டு மதநிலை ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறார்
பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (நூல்)
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரால் எழுதி வெளியிடப்பட்ட நூல் பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் ஆகும். 1966இல் பதிப்பிடப்பட்ட இந்நூல் 240 பக்கங்களை உள்ளடக்கியதாகும்.
நாகரிகம் சொற்பிறப்பு
நகர்+அகம் என்பது புணர்ந்து நகரகம் ஆகிப் பின் திரிந்து நகரிகம் என்றாகி அதன் பின்னர் நாகரிகம் என்று திரியும். மாந்தர் முதன்முதலில் நகர நிலையிலேயே நாகரிகம் அடைந்தமையால் நாகரிகப் பெயர் அதனின்றே தோன்றியது.
ஆகவே தமிழில் பண்பு என்பது ஒருவரில் காணப்படும் பண்படுத்தப்பட்ட நல்ல தன்மையும், இயல்பு என்பது இயற்கையாகவே காணப்படுபவையும் குறிக்கும்.
நாகரிகத்திற்கும் பண்பாட்டுக்கும் வேறுபாடு
பாவாணர் திருந்திய வாழ்க்கை பண்பாடு என்றும் அதாவது “உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை” நாகரிகம் என்றும், திருந்திய ஒழுக்கம் அதாவது “உள்ளத்தின் செம்மை” பண்பாடு எனவும் குறிப்பிடுகிறார்.
முன்னுரையில் மேலதிகமாக இந்திய நாகரிகம் தமிழரதே ஆதல் பற்றியும், இந்திய நாகரிகம் ஆரியரதே எனக் காட்டக் கையாளப்படும் வழிகள் பற்றியும், குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும் ஆகியன பற்றியும் கூறப்படுகிறன.

ஈகை
ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர்.
ஐந்திணைப் பொருள்
உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது.
குலவை
நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் பூப்புனித நீராட்டு போன்ற இல்ல நன்னிகழ்வுகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.
சாணம் இட்டு
மெழுகுதல்
சாணம் என்றால் மாட்டின் கழிவு ஆகும். தமிழரைப் பொருத்தமட்டில் வீடுகளை மெழுகும் போது பசுவின் சாணத்தைக் கொண்டே மெழுகுவர்.