சாணம் இட்டு மெழுகுதல்

சாணம் இட்டு மெழுகுதல் என்பது தமிழரின் பழக்கவழக்கங்களின் ஒன்றாகும். அதாவது தற்கால கட்டிடப் பொருள்களின் ஒன்றான சீமெந்து அறிமுகமாகும் முன்னர், தமிழர் தங்கள் வீடுகளின் நிலப்பகுதியை சாணம் இட்டு மெழுகுதல் வழக்கையே கொண்டிருந்தனர்.
- இப்பழக்கம் தமிழரின் பழங்காலப் பழக்கங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சிலர் வீடுகளின் நிலத்தை மட்டும் அல்லாமல் சுவர்களையும் சாணமிட்டு மெழுகும் வந்துள்ளனர்.
- இப்பழக்கம் தற்போது பெரும்பாலும் அருகிவருகிறது என்றாலும், சில கிராமப்புரங்களில் தற்போதும் காணப்படுகிறது.
சொல்விளக்கம்: “சாணம்” என்றால் மாட்டின் கழிவு ஆகும். தமிழரைப் பொருத்தமட்டில் வீடுகளை மெழுகும் போது பசுவின் சாணத்தைக் கொண்டே மெழுகுவர்.
கோலம் இடல்:
தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றான அதிகாலையில் எழுந்து பெண்கள் வீட்டு வாசலில் கோலமிடலின் போது, சாணம் இட்டு மெழுகிவிட்டு கோலம் இடல் பழக்கமும் இருந்தது. சிலர் சாணத்தை தெளித்துவிட்டு கோலம் போடும் வழக்கைக் கொண்டவர்களும் உளர்.

சிங்களவரிடையே
சாணம் இட்டு வீட்டின் நிலத்தை மெழுகும் பழக்கம், தமிழரைப் போன்றே சிங்களவரிடம் இருந்தது. தற்போதும் வசதியற்ற கிராம மக்கள் தங்கள் வீடுகளை சாணம் இட்டு மெழுகுதல் காணப்படுகின்றன.
- சாணம் அல்லது சாணி என்பது கால்நடையான மாட்டினுடையகழிவினைக் குறிப்பதாகும். இச்சாணம் இயற்கை உரம், இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படுகிறது.
- இந்துத் தமிழர்களின் வழிபாடுகளுக்கு பயன்படும் திருநீறு தயாரிக்கவும், இந்துத் தமிழர்களின் இல்ல வாசல்களில் மெழுகவும் பயன்படுகிறது. இதனை கிருமிநாசினி என இந்துத் தமிழர்கள் கருதுகிறார்கள்.

இச்சாண எரிவாயு மரபு சாரா எரிசக்தியாக உபயோகப்படுத்தப்படுகிறது.
- இச்சாணத்தினை வயல் வெளிகளுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர்.
- இது இயற்கை உர வகைச் சார்ந்தது. இந்த சாணத்தில் நைட்டிரஜனும், கால்சியமும், பாஸ்பரசும் காணப்படுகின்றன.
- இச்சாணத்தினை வைத்து தயாரிக்கப்படும் சாண எரிவாயுவில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகம் காணப்படுகின்றன.

தமிழர் பண்பாட்டு
நூல்கள்
பண்படுதல் என்றால் சீர்படுத்தல் அல்லது திருத்தல் எனப்பொருள் படும். நிலத்தைப் பண்படுத்தல் என்றால் நிலத்தை பயிர்செய்யத்தக்கவாறு சீர்படுத்தலாம்.
ஈகை
ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர்.
ஐந்திணைப் பொருள்
உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது.
குலவை
நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் பூப்புனித நீராட்டு போன்ற இல்ல நன்னிகழ்வுகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.