Tortoise

ஆமைகள் அல்லது நில ஆமைகள் என்பவை டெஸ்டியுடினிடே என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும்.

நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்புக்கூடிய உயிரினமாகும்.

பிரித்தானிய ஆங்கிலம், இந்த ஊர்வன விலங்குகளை, கடலில் வாழும் ஆமைகளைக் கடலாமைகள் என்றும் ஆறு அல்லது உப்பு நீரில் வாழ்வனவற்றை உணவு ஆமைகள் என்றும் நிலத்தில் வாழும் ஆமைகளை சாதாரண ஆமைகள் எனறும் விரித்துரைக்கிறது. எனினும், இதற்கு விதிவிலக்காக அமெரிக்கா அல்லது ஆத்திரேலியப் பொதுப் பெயர்கள் பரவலாக வழக்கில் இருக்கும் இடங்களில், பறக்கும் ஆற்று ஆமை என்பது போன்ற சில பெயர்களும் உள்ளன.

ஆமை வகைகள்
  • நில ஆமை
  • நீர் ஆமை
  • பேராமை
  • கழுகுமூக்கு ஆமை
  • ஏழு வரி ஆமை
  • சிற்றாமை

உடலமைப்பு இதன் மேலோடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கி காணப்படுகின்றன. இவற்றின் நுரையீரல் மேலோட்டினை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது. பற்களுக்குப் பதிலாக கொம்புகளால் ஆன அசையாத அலகு போன்ற அமைப்பு இரு தாடைகளிலும் இருக்கிறது. இதன் கை, கால்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ ஏற்றதாகவும் உள்ளது.

tortoise
ஆமைகளின் தோற்றம்

பெண் ஆமைகள் கூட்டு வளைகளைத் தோண்டுகின்றன; அதில் அவை, ஒன்றில் முதல் முப்பது முட்டைகள் வரை இடுகின்றன. இவ்வாறு முட்டையிடும் செயலானது, குறிப்பாக இரவில்தான் நடைபெறுகிறது. இதன் பின்னர் தாய் ஆமை தனது முட்டைகளை மணல், மண் மற்றும் உயிரினப்பொருட்களைக் கொண்டு மூடுகிறது. இந்த முட்டைகள் தனித்து விடப்படுகின்றன. ஒரு ஆமை எந்த இனத்தைச் சார்ந்தது என்பதைப் பொருத்து முட்டைகள் பொரிவதற்கு அறுபதில் இருந்து நூற்றியிருபது நாட்கள் வரை ஆகும்.

ஆமைகளின் வாழ்நாள்

மனிதர்களுடன் ஒப்பிடுகையில், ஆமைகள் நீண்ட வாழ்நாள் உடையதாய் இருக்கின்றன; மற்றும் சில ஆமைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. இதன் காரணமாக, சீனப் பண்பாட்டில் இவை நீண்ட வாழ்நாளின் சின்னமாக விளங்குகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றிலேயே மிகவும் முதிய ஆமை, அதிலும் மிகவும் முதிய விலங்கினம் என்பதானது.

ஆமைகளின் உணவு

நிலத்தில் வாழும் ஆமைகளில் பெரும்பான்மையானவை, தாவர உண்ணிகளாகும். இவை புற்கள், விதைகள், இலைகள் கொண்ட பச்சைக் காய்கறிகள், பூக்கள் மற்றும் சில பழங்கள் ஆகியவையே உண்ணுகின்றன. செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் ஆமைகளுக்கு, குறிப்பாக காட்டுப் புற்கள், விதைகள் மற்றும் சில குறிப்பிட்ட பூக்களை கொண்ட உணவே தேவைப்படுகிறது. சில ஆமை இனங்கள் புழுக்கள் அல்லது பூச்சிகளை உண்ணுகின்றன.

பிறவற்றைக் காண்க :

எறும்புண்ணி

எறும்புத்தின்னி கவச உடலைப் பெற்றுள்ளது. இது அழுங்கு எனப்படும் கவச உடல் விலங்கு ஆகும்.

வரையாடு

மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லப்படும் விலங்கு வரையாடு என்று இன்று சொல்லப்படுகிறது.

பசு மாடு

வீட்டு விலங்குகளில் மிகவும் பயன் தரும் விலங்கு பசு ஆகும். வைக்கோல், புல் ,புண்ணாக்கு போன்றவ்ற்றை உண்ணுகிறது. கழுநீரை விரும்பிக் குடிக்கிறது.

பாம்பு

நாகமும் சாரையும் இணையும் என்று நம்புகிறார்கள். உண்மையில் இரு பாம்புகள் பின்னிப் பிணைவது ஒரு இனப்பெருக்க நிகழ்வே.