squirrel

அணில் மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி ஆகும். அணில்கள் அமெரிக்கா, ஐரோவாசியா மற்றும் ஆபிரிக்காவையும் தாய் நாடாக கொண்டவை. பின்னர் ஆத்திரேலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்திய அணில் என்பது ஒரு வகை அணில் ஆகும். இது மூன்று கோடுகளுள்ள அணில் என அழைக்கப்படுகின்றது. இது செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது. இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மேற்கு ஆவுத்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இயற்கையாக மற்ற விலங்குகளால் குறைவாக வேட்டையாடபப்டுவதால் சிறிய தீங்குயிராக மாறி, அழிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டது. இதன் நெருங்கிய ஐந்து கோடுகளுள்ள அணில் வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

  • இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் என்பது மரத்தின் மீது வாழும் மிகப்பெரிய அணில் வகையாகும். இவை பகலில் உணவருந்தும் பழக்கமும், தாவர உண்ணியாகவும், கிளைகளில் மீது வாழும் வகையாகவும் தெற்காசியாவில் உள்ளது.இது மகாராஷ்டிரா  மாநிலத்தின் மாநில விலங்காகவும் உள்ளது.
  • பழுப்பு மலை அணில் என்பது ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.
உயிர்வாழும் ரகசியம்

அணிலின் முன்பற்கள் நீளமானவை, கூர்மையானவை. அவை தொடர்ந்து வளரும் தன்மை கொண்டவை. அணில்கள் இப்படி மரப்பட்டைகளையும் கொட்டைகளையும் கடித்துத் தங்கள் பற்களை தேய்க்காவிட்டால் அவை நீளமாக வளர்ந்துவிடும். அப்படி நீளமாகிவிட்டால் அணில்களால் வாயை அசைக்க முடியாது. வாயை அசைத்தால்தானே சாப்பிட முடியும்? சாப்பிட்டால்தானே உயிர்வாழ முடியும்? அதனால் அணில்கள், பட்டினி கிடந்து இறப்பதற்குப் பதிலாக இப்படிக் கொறித்துக் கொறித்துத் தங்கள் வாழ்நாளை நீட்டித்துக்கொள்கின்றன.

squirrel

பரம்பல்: மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பலின் காடுகள் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவற்றினை இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.

அணில்களின் கருணை அணில்களிடம் இன்னொரு சிறப்பியல்பும் இருக்கிறது. அணில் குட்டிகளின் அம்மா உணவு தேடச் செல்லும்போது மற்ற விலங்குகளால் இறக்க நேரிட்டால், அணில் குட்டிகள் என்ன செய்யும்? அவற்றுக்கு இரை தேடி சாப்பிடத் தெரியாதுதானே. அதனால் மற்ற அணில்கள், அந்த அணில் குட்டிகளைத் தத்தெடுத்து வளர்க்கும்.

அணில் தோற்றம்

இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும்.சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும்.

அணில் வசிப்பிடம்

அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும்.

அணில் உணவு

அணில் பெரும்பாலும் விதைகள், கொட்டைகள், பழங்கள் முதலியவற்றையே உணவாக உட்கொள்ளும்.

பிறவற்றைக் காண்க :

பூனை

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

ஆமை

ஆமைகள் அல்லது நில ஆமைகள் என்பவை டெஸ்டியுடினிடே என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும்.

எறும்புண்ணி

எறும்புத்தின்னி கவச உடலைப் பெற்றுள்ளது. இது அழுங்கு எனப்படும் கவச உடல் விலங்கு ஆகும்.

வரையாடு

மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லப்படும் விலங்கு வரையாடு என்று இன்று சொல்லப்படுகிறது.