யாளி(யாழி)

yali

                    நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?

யாழிகள்:

  • தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.

யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட!!!  சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல,  எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல,

தமிழரின் புராதன விலங்கு யா‌ழி.

அவை போற்றப்பட வேண்டும்…

  • தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். 
  • இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
  • சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் கி.மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது.

  பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

சிம்ம யாளி

மகர யாளி

யானை யாளி

yali

சீனாவில், பாண்டா கரடி, இத்தாலியில் வெள்ளைப்புலி இப்படிச் சில விலங்கினங்கள் அழியாமல் இப்போதும் பாதுகாப்பதுபோல், யாளியையும் நமது முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.  இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில்கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை “யாளி வரிசை” என்றே அழைக்கிறோம்.

  • ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில்கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. 
  • மேலும் தஞ்சைபெரியகோவில், மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ்மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின்சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். 
  • இப்படிப்பட்ட யாளி சிலை தென்இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்குமேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறியதவறிய உண்மை. 
  • குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில்பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழுமனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.இனியாவது கோயில் செல்லும் நாம் அனைவரும்  இந்த யாழின்  சிலையைப் பார்த்து, அதன் சிறப்பை அறிவோம்.
பிறவற்றைக் காண்க :

காளை

காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை.

புலி

சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் கிழக்கு ஆசிய  நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்வார்கள்.

சிங்கம்

1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.

யானை

மனிதர்கள் தவிர்த்து மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ஆகும்.