நிலக்கடலை

Groundnut Cultivation

சாகுபடி செய்யும் முறை:

 

நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜூன்  – ஜூலை  மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களே ஆகும். நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.

 • (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்.
 • “18/64” அளவுள்ள (7.2 மி.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். உடைந்து போன, சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.
 • முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப்பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும்.
 • தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும். ஓட்டின் உட்புறம் வௌளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருப்பின் அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது.

அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது.

Groundnut Cultivation
 • மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சத் தேவையில்லை.
 • அறுவடைக்கு முந்தைய பாசனத்திற்கு நீர் இல்லையெனில் நாட்டுக்கலப்பையைப் பயன்படுத்தி செடிகளைப்பிடுங்கி ஆட்களைக்கொண்டு மண்ணிலுள்ள காய்களைச் சேமிக்க வேண்டும்.
 • பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக் கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும். செடிகளிலிருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலை பிரிப்பானை உபயோகப்படுத்தலாம்.
Groundnut Cultivation
 • காய்களை நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும். 
 • இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைப்பது முழுவதுமான காய்தலுக்கு உதவுகிறது.
 • வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது நேரடியாகக் காய வைத்தலைத் தவிர்க்க வேண்டும். 
 • காய்களைக் கோணிப்பைகளில் கட்டி மணற்பரப்பின் மீது சேகரித்து வைக்கலாம்.
 • காய்ந்த காய்களுக்கு ஈரப்பதம் வருவதைத் தவிர்க்க வேண்டும்

இவ்வாறு மேற்கூறிய வேளாண்மை உத்திகளைக் கையாண்டு மானாவாரி நிலக்கடலையில் மகசூல் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிறவற்றைக் காண்க :

நெல்

நடைமுறையில் இருந்து வரும் நெல் சாகுபடி முறைகளில் சில மாற்றங்களை கொண்ட புதிய முறையாகும். இரட்டிப்பு மகசூல் பெறலாம்.

எள் சாகுபடி

காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாகப் பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது.

மக்காசோளம்

உஷ்ணத்தை கம்பு போக்குகிறது. அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண், வாய் புண்னை கம்பு குணப்படுத்தும்.

கரும்பு

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள சிறுநீரக குழாய் சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.