திராவிடன்

 

ஒருவனாய் இணைவோம், ஒரு புதிய கண்ணோட்டத்தில்.

வரலாறு பூர்வமான திராவிடப் பண்பாட்டு மரபில் வந்தவற்றில் மூத்தவள் தமிழ், இளையவள் மலையாளம், இடைப்பட்ட நிலையில் தெலுங்கும் கன்னடமும் உள்ளன.

 

” …தெக்கனமும் அதில் சிறந்த

  திராவிடனல் திருநாடும்… “

 

திராவிடன் என்பவன் ஒருவன் அல்ல தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா  என்னும் ஐந்து  மாநிலங்களின்  ஒன்றிணைப்பு. நாம்  அனைவரும்  திராவிட  மக்களாக ஒன்றிணைய ! ஒன்றுபட !!  நாம் எடுக்கும் ஓர் சிறிய முயற்சி..

கால நடைமுறைக்கேற்ப நம் எண்ணங்களும், மொழிகளும்  மாறிக் கொண்டுச்  செல்கின்றன. ஆகவே, இளைஞர்களாகிய நாங்கள் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மொழி, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் ஒன்றுச் சேர இணைத்து இவ்வலைதளத்தில் வெளியிட்டு உள்ளோம்.

செயல்கள் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன!

இளைஞர்களே !  அன்று நம் முன்னோர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன், நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காத்து, உரிமைகளை எடுத்துரைத்ததைப் போல, இன்று நாம்  கருத்துவேறுபாடுகளையும், மொழிகளையும், எல்லைக்கோடுகளையும் தகர்த்தெறிந்து ஒன்றிணைந்து ஓர் உலகமாய் திராவிட நாடாகப் படைக்க  எங்கள்  இரு கரங்களினால் அழைக்கிறோம்.

“திராவிடனே   ஒன்றுபடு

  தழைக்கட்டும்  நம்  பாரம்பரியம்

  வளரட்டும்  நம்  கலாச்சாரம்”

நம் திராவிட வலைதளத்தில், எவ்வித எதிர்பார்ப்புகள் இல்லாமல், எவ்வொரு கேளிக்கைகளுக்கும் இடம் கொடாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தில் எவ்வித பிழைகள் இருந்தாலோ, யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இருந்தாலோ, முழு மனதோடு மாற்றக் காத்திருக்கிறோம். வலைதளத்தில் தமிழ் மொழி அல்லாது  திரவிட மொழியான பிற மொழிகளும் வரவேற்கப்படுகிறது விருப்பமமுள்ளவர்கள் தங்கள் மொழிகளின் பெருமைகளை பதிவு செய்யலாம்.    

இப்படிக்கு,

 

திராவிடன்

பின்குறிப்பு : எங்கள் வலைதளத்தில் தாவரவியல், விலங்கியல், மருத்துவக்குறிப்பு ஆகியன பற்றித் தகவல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாசகர்களே! உங்களின் முன்னோர்கள் உரைத்த கதைகள், சிறுகதைகள், இயற்கைக் குறிப்புகள் அனைத்து தகவல்களையும்  விருப்பம் உள்ளவர்கள் எங்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம் மற்றும் தாவரங்களின் விதைகளை இலவசமாக வாங்கவோ கொடுக்கவோ செய்யலாம். உங்களுக்கு ஏதேனும்  ஐயம்(சந்தேகம்) இருந்தால் எங்களை தொடர்புக் கொள்ளவும். இச்செயல் முழுவதும் இயற்கையை வளர்க்க எடுத்த ஓர் முயற்சியே !!!!!